Content

ARTIST'S PROFILE DIRECTORY

Lakshmansruthi.com

Solar Sai

General Profile of Solar Sai  -   Cine Play Back Singers

இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் மூலமாக அறியப்பட்டவர்தான் பாடகர் Solar சாய். வேட்டையாடுவிளையாடுவில் இவரும் பிராங்கோவும் சேர்ந்து பாடிய ”நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே” பாடல் அந்தக்காலத்தில் பிரபல்யமாக இருந்தது. அதன்பின்னர் சோலர்சாய் சில பாடல்களை பாடியபோதும் அந்தப்பாடல்கள் ஒன்றும் பெரிதாக பேசப்படவில்லை.

பின்னர் D.இமானின் இசையில் மைனாவிற்காக ”ஜிங்கு சிக்கு” என்று பெரிய்ய ஹிட் பாடலை பாடினார். ஆயினும் மற்ற பாடகர்கள் போல் ஒரு ஹிட் கொடுத்த பிறகு கிடைக்கும் பிரபல்யம் இவருக்கு கிடைத்ததா? என்று கேட்டால் இல்லை என்று ஒருவார்த்தையில் சொல்லிவிடலாம்.

பலருக்கு இவரை பாடகரென்றே தெரியாது கவலைக்குரிய விடயம்தான். தனது முதல்வாய்ப்பின்பும் ஹாரிஸ்ஜெயராஜ் வாரணம் ஆயிரத்தில் ”யெத்தி யெத்தி யேத்தி” மற்றும் ”கோ”வில் ”அக நக” என்ற இரு பாடல்களிலும் தனிக்குரலாக இல்லாமல் மற்றைய பாடகர்களுடன் சேர்ந்து பாடவைத்தார்.

அண்மையில் ஒஸ்தியிலும் ”கலாசலா கலசலா” பாடலிலும் இவரது குரல் வந்திருந்தது. ஆனால் வெளியில் LR.ஈஸ்வரி,  TR.ராஜேந்தர் பாடிய பாடல்என்று பேசப்பட்டமையால் இவரது பெயர் இந்தபாடலிலும் வெளியே தெரிந்த பாடாக இல்லை. உண்மையில் இந்த பாடலில் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் வரும் ஆண்குரல் சோலர் சாய்க்குரியது. அதாவது படத்தில் சோனுசூட் பாடும் நேரத்தில் வரும் குரல்.