Content

ARTIST'S PROFILE DIRECTORY

Lakshmansruthi.com

B Gomathi Balaraman

General Profile of B Gomathi Balaraman  -   List Kavignargal

முன்னுரை...

நீர்க் குமிழிகள் உடையும்போதே அதன் ஜனனமும் மரணமும் முடிந்து போகின்றன, அதன் முடிவுக்கு பின் எத்தனை சோகங்கள் கடலில் மோதும் அலை நுரைகள் கரையிலேயே முடிந்து போகின்றன. அதனை அலைகள் கைகொடுத்து அழைத்து செல்வதில்லை, மண்ணிலே அடிபட்டு மடிந்துதான் போகின்றன. அதற்கு எத்தனை சோகங்கள் எத்தனை தாக்கதல்கள் இந்த சிறகதையில் வரும் கதாபாத்திரங்கள் போல் நிஜங்களில் தோன்றும் நிழல்களில் இந்த நிர்க் குமிழிகள் இளைப்பாறிக் கொள்வது போல் இந்த கதாபாத்திரங்களும் இளைப்பாறட்டும்.


இங்ஙனம்,
ப.கோமதி பலராமன், எம்.ஏ., எம்.எட்., எம்.பில்., பி.எச்.டி.,

 

அன்பே உனக்காக!

     கற்றது கைமண்ணளவு;

     கல்லாதது உலகளவு . . .

     கற்பது வாழ்விற்கு உயர்வு;

     கற்பிப்பது அறிவுக்கு தெளிவு!

     காண்பதுக் காட்சிக்கு விருந்து;

     கவர்வது மனதின் விருப்பு! . . .

     தெளிந்திருக்க   -    குழம்பாதே . . .

     புரிந்திருக்க     -    சுருக்காதே . . .

     மறைந்திருக்க   -    ஒதுங்காதே . . .

     மறைத்துவைக்க -    பதுக்காதே . . .

     பொறுத்திருக்க   -    மறக்காதே . . .

     கடமையாற்ற    -    தயங்காதே . . .

     கலங்கியிருக்க   -    நினைக்காதே . . .

     பலமாயிக்க      -    பதைக்காதே . . .

     பயனாயிருக்க    -    பகைக்காதே . . .

வாழ்க்கை

ஒரு “பாடம்“ –

பயின்றால் மட்டும் அர்த்தம் விளங்கும்.

ஒரு “அனுபவம்“ –

வாழ்ந்தால் மட்டுமே அர்த்தம் புலப்படும்.

ஒரு “போராட்டம்“ –

களமிறங்கினால் தான்

வெற்றியும் &  தோல்வியும்.

ஒரு “தேடல்“ –

திருப்தி ஏற்படும் வரை இதன் பாதை நீளும்.

ஒரு “புதையல்“ –

முயற்சி, உழைப்பு, அதிர்ஷ்டம்

இதன் பின்னணியில் மட்டும்.

ஒரு “பிடிப்பு“ –

நாளையென்றக் கேள்விக்கு நம்பிக்கை துளிர்.

ஒரு “வரம்“ –

பெற்றோர்களின் யாகத்திற்கு இறைவன்

அளித்த நன்கொடை.

ஒரு “பயணம்“ –

முடிவுக்கு வராமலேயே முற்றுப் பெறுவது.

ஒரு “கடல்“ –

மூழ்குவதும், முத்தெடுப்பதும்தான் கலை.

ஒரு “வசந்தம்“ –

வசதியிருப்பவனுக்கும்,

வறுமையறியாதவனுக்கும்.

ஒரு “பாதை“ –

நடந்தே தீர வேண்டும் என்றக் கட்டாயத்தில்.

ஒரு “மிரட்டல்“ –

நேற்று, இன்று, நாளையென ஞாபகப்படுத்த.

ஒரு “கணக்கு“ –

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்

என கணக்கிட.

ஒரு “கண்ணாடி“ –

உள்ளதை உள்ளபடியே அறிவிக்க.

ஒரு “பலவந்தம்“ –

வேண்டாம் என்றாலும் விடாது துரத்துவது.

மொத்தத்தில் வாழ்க்கை

“நம்பிக்கை“ – வாழ நினைப்பவர்களுக்கு…

“தெளிவு“ – வாழ்ந்து காட்டுபவர்களுக்கு…

“பொலிவு“ – வாழ்ந்து முடித்தவர்களுக்கு…

‘மரணம்‘ இதனை தீண்டாதவரை

‘காலம்‘ இதனை முடிக்காதவரை

‘வாழ்க்கை‘ அத்தியாயம் தொடரும்……